என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பால சரவணன்
நீங்கள் தேடியது "பால சரவணன்"
எல்.கே.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் - கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நீயா 2’ படத்தின் விமர்சனம்.
நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். ஜெய்யை பார்க்கும் கேத்தரின் தெரசாவுக்கு ஜெய் மீது காதல் வந்து, அவரை திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுகிறார். கேத்தரின் தனது காதலை ஜெய்யிடம் தெரிவிக்க, ஜெய் கேத்தரினை திருமணம் செய்ய மறுக்கிறார். கேத்தரின் விடாப்பிடியாக இருக்க, தனக்கு நாக தோஷம் இருப்பதால், நாக தோஷம் இருக்கும் பெண்ணை தான் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று ஜெய் கூறுகிறார்.
பின்னர் தனக்கும் நாக தோஷம் இருப்பதாக கேத்தரின் கூற, இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு கேத்தரினுக்கு நாக தோஷம் இல்லை என்பது தெரிய வர, பரிகாரம் செய்வதற்காக இருவரும் கொடைக்கானல் செல்கின்றனர்.
அங்கு கடந்த ஜென்மத்தில் கிடைத்த சாபத்தால், பிரிந்த தனது காதலனான ஜெய்யுடன் சேருவதற்காக காத்திருக்கிறார் பாம்பு பெண்ணாகிய ராய் லட்சுமி.
கடைசியில், ஜெய்யின் நாக தோஷம் நீங்கியதா? கேத்தரினுடன் இணைந்தாரா? ராய் லெட்சுமியுடன் இணைந்தாரா? ராய் லட்சுமியின் முன் வாழ்க்கைக் கதை என்ன? அவருக்கு சாபம் வழங்கியது யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர் ஜெய் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் வந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்துவிட்டுச் சென்றிருக்கிறார். காதல், ஆக்ஷன் என தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜெய்யை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாபாத்திரத்தில் கேத்தரின் தெரசா ரசிகர்களை கவர்கிறார். காதல், கவர்ச்சி என கிறங்கடிக்கிறார். பாம்பு பெண்ணாக ராய் லட்சுமி ராயலான பாம்பாக வலம் வருகிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் வரலட்சுமி தனது கதாபாத்திரத்திற்கு மெருகேற்றிவிட்டு சென்றிருக்கிறார். பால சரவணன் காமெடியில் ஓரளவு சிரிக்க வைக்கிறார்.
நாக தோஷத்தை மையமாக வைத்து படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார் எல்.கே.சுரேஷ். முதல்பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியிலும் தொடர்ந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். பாம்பு வரும் கிராபிக்ஸ் காட்சிகள் விறுவிறுப்பை தூண்டுகின்றன. படத்தில் எந்த அளவுக்கு விறுவிறுப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு கவர்ச்சியும் இருக்கிறது.
ஷபீரின் பின்னணி இசையும், ராஜவேல் மோகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளன.
மொத்தத்தில் ‘நீயா 2’ கவர்ச்சி.
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் விமர்சனம். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan
பொன்வண்ணனின் மகன் ஹரிஷ் கல்யாண். சிறுவயதிலேயே தாயை பிரிந்து வளரும் ஹரிஷ் தாய் பாசத்திற்காக ஏங்குகிறார். தனிமையையே விரும்பும் கோவக்காரராக வளர்கிறார். எந்த பிரச்சனை என்றாலும் முதல் அடி இவருடையதாக இருக்கும். பால சரவணனும், மாகாபா ஆனந்தும் இவரது நண்பர்கள்.
இந்த நிலையில், பார்ட்டி ஒன்றில் நாயகி ஷில்பா மஞ்சுநாத்தை சந்திக்கிறார். அங்கு ஏற்படும் பிரச்சனையில் ஷில்பாவின் குடும்ப நண்பரை அடித்துவிடுகிறார். பின்னர் ஷில்பா ஒரு சில பிரச்சனைகளில் சிக்க அதிலிருந்து அவரை காப்பாற்றி விடுகிறார். இதையடுத்து ஷில்பாவுக்கு ஹரிஷ் மீது காதல் வர, இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள்.
தனது காதலியின் மீதான ஈர்ப்பும், நெருக்கமும் அதிகரிக்க, அவளும் தன்னை விட்டு போய்விடுவாளோ என்று நினைக்கும் ஹரிஷ், ஷில்பாவை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். தனது வீட்டுப் பிரச்சனை காரணமாக ஷில்பா திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.
தனது அம்மா போலவே இவளும் தன்னை பிரிந்து சென்று விடுவாள் என்று எண்ணும் ஹரிஷ், தனது அம்மா மீதுள்ள கோபத்தையும் ஷில்பா மீது வெளிப்படுத்துகிறார்.
இதனால் இவர்களுக்கிடையே என்னென்ன பிரச்சனைகள் வந்தது? ஹரிஷ் - ஷில்பா இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார். தனிமையை விரும்பும், அதிகமாக பேசாத கோவக்கார இளைஞனாக ரசிகர்களை கவர்கிறார். பாசம், காதல், ஆக்ஷன் என நடிப்பில் மிளிர்கிறார். ஷில்பா மஞ்சுநாத் துணிச்சலாக நடித்திருக்கிறார். காதல், கிளாமர் என ரசிகர்களை கவர்கிறார். மாகாபா ஆனந்த், பால சரவணன் காமெடிக்கு கைகொடுக்க, பொன்வண்ணன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பெற்றோர் பிரிந்தால் குழந்தைகள் என்ன மாதிரியான அவஸ்தைக்குள்ளாவார்கள், அவர்களது ஏக்கம், அவர்களது வாழ்க்கை இப்படியும் மாறலாம் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இயக்கியிருக்கிறார் ரஞ்சித் ஜெயக்கொடி. முதல் பாதி ரசிக்கும்படியாக விறுவிறுப்பாக செல்ல, இரண்டாவது பாதி நீளமாகவும், தேவையில்லாத சில காட்சிகள் இடம்பெற்று தொய்வை ஏற்படுத்துகின்றன. இளைஞர்கள் ரசிக்கும்படியான படமாக இயக்கியிருக்கிறார்.
பின்னணி இசையில் சாம்.சி.எஸ். மிரட்டியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஏ.கவின்ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். பவன் ஸ்ரீகுமாரின் படத்தொகுப்பு சிறப்பு.
மொத்தத்தில் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' பிரிவின் வலி. #IspadeRajavumIdhayaRaniyum #IspadeRajavumIdhayaRaniyumReview #HarishKalyan #ShilpaManjunath
Ispade Rajavum Idhaya Raniyum Ispade Rajavum Idhaya Raniyum Review Harish Kalyan Ranjith Jayakodi Shilpa Manjunat Ma Ka Pa Anand Bala Saravanan Ponvannan இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம் ஹரிஷ் கல்யாண் ரஞ்சித் ஜெயக்கொடி ஷில்பா மஞ்சுநாத் மாகாபா ஆனந்த் பால சரவணன் பொன்வண்ணன்
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வருகிற மார்ச் 15-ந் தேதி ரிலீசாகவிருக்கும் நிலையில், இந்த படம் காதல் மற்றும் புரிதல் பற்றியது என ஹரிஷ் கல்யாண் கூறினார். #IspadeRajavumIdhayaRaaniyum #HarishKalyan
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் வருகிற மார்ச் 15-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
படம் பற்றி ஹரிஷ் கல்யாண் பேசும் போது,
“ இந்த படம் காதலை மற்றும் புரிதலை பற்றிய படம். இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் இடம்பெறும் சில சம்பவங்கள் அனைவரது வாழ்விலும், சந்தித்ததாக இருக்கும்.
ஒளிப்பதிவாளர் கவின் வண்ணங்களை எண்ணத்தில் கலந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கதை சொன்ன தருணமே இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் என்று அறிந்தே தேர்வு செய்தேன். அதில் ஓர் அளவுக்கு வெற்றியும் பெற்று இருக்கிறேன் என நம்புகிறேன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எனக்கொரு நிரந்தரமான இடத்தை பெற்றுத் தரும் என நம்புகிறேன்.
கதாநாயகி ஷில்பாவுடன் இணைந்து பணிபுரிந்தது சிறப்பானது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பல வருடங்களுக்கு பேசப்படும். காதலுக்கு மரியாதை தரும் படம் என்றால் மிகையாகாது. இந்தப் படம் நிச்சயமாக யாரையும் புண்படுத்தாது. இந்தப் படத்தில் பெண்கள் ஆண்களை சார்ந்து இல்லை என வலியுறுத்துகிறோம். என்னுடைய கதாபாத்திரமான ரசிகர்களை கவரும் என நம்புகிறேன் ” இவ்வாறு கூறினார். #IspadeRajavumIdhayaRaaniyum #HarishKalyan #ShilpaManjunath
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் முன்னோட்டம். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan
மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரித்துள்ள படம் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'.
ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நாயகியாகவும் நடித்துள்ளனர். மாகாபா ஆனந்த், பால சரவணன், பொன்வண்ணன், பன்னீர் புஷ்பங்கள் புகழ் சுரேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - கவின், இசை - சாம்.சி.எஸ், படத்தொகுப்பு - பவன் ஸ்ரீகுமார், தமிழக வெளியீடு - ஃபைவ் ஸ்டார் பிக்சர்ஸ், தயாரிப்பு - பாலாஜி கப்பா, எழுத்து, இயக்கம் - ரஞ்சித் ஜெயக்கொடி.
படம் பற்றி இயக்குநர் பேசும் போது,
எதிர் எதிர் முனையில் இருக்கும் ஒரு காதல் ஜோடியை சுற்றி நடக்கும் கதை இது. இந்த படம் ஹரிஷ் கல்யாணை புதிய பரிமாணத்துடன் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என நம்புகிறேன் என்றார்.
படம் வருகிற மார்ச் 15-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan #ShilpaManjunath
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் டிரைலர்:
சேரன் இயக்கத்தில் உமாபதி ராமையா - காவ்யா சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `திருமணம்' படத்தின் முன்னோட்டம். #Thirumanam #Cheran #Umapathi
பிரெனிஸ் இன்டர்நேஷனல் சார்பில் பிரேம்நாத் சிதம்பரம், வெள்ளை சேது தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `திருமணம்'.
இந்த படத்தை இயக்கி நடித்திருக்கிறார் சேரன். இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இன்னொரு நாயகனாகவும், நாயகியாக காவ்யா சுரேசும் நடித்துள்ளனர். தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், மனோபாலா, பால சரவணன், சுகன்யா, சீமா ஜி. நாயர், அனுபமா குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - ராஜேஷ் யாதவ், இசை - சித்தார்த் விபின், படத்தொகுப்பு - பொன்னுவேல் தாமோதரன், பாடல்கள் - சேரன், லலித் ஆனந், யுகபாரதி, நடனம் - சஜ்னா நஜம், ஆடை வடிவமைப்பு - கவிதா சச்சி, தயாரிப்பு - பிரேம்நாத் சிதம்பரம், வெள்ளை சேது, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சேரன்.
சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு படம் இயக்கியிருக்கும் சேரன் படம் பற்றி பேசும் போது,
திருமணம் படத்தை 4 வருடங்களுக்கு பிறகு இயக்கி இருக்கிறேன். இந்த இடைவெளியில் நிறைய அனுபவங்களை பெற்று விட்டேன். இந்த அனுபவங்கள் என்னை 10 வருடங்களுக்கு வழிநடத்தும் என்று நம்புகிறேன். ஒரு நடுத்தர குடும்பத்தில் பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கி திருமணம் நடப்பது வரையிலான சம்பவங்களே படத்தின் கதை. இவ்வாறு கூறினார்.
படம் வருகிற மார்ச் 1-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Thirumanam #Cheran #Umapathi #KavyaSuresh #Sukanya #ThirumanamFrom1stMarch
திருமணம் டிரைலர்:
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan
‘பியார் பிரேமா காதல்’ படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்திருக்கிறார். மாகாபா ஆனந்த், பால சரவணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படம் வருகிற மார்ச் 15-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
உங்களுக்காக , மார்ச் 15th முதல் ! #IspadeRajavumIdhayaRaniyum@jeranjit@ShilpaManjunat@SamCSmusic@thinkmusicindia@SureshChandraa@CtcMediaboy@madhavmediapic.twitter.com/sujVKfF4Rb
— Harish kalyan (@iamharishkalyan) February 23, 2019
மாதவ் மீடியா தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கிறார். கவின்ராஜ் ஒளிப்பதிவும், பவன் ஸ்ரீகுமார் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan #ShilpaManjunat
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் டிரைலர்:
பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சேரன் அடுத்ததாக திருமண பந்தத்தை மையப்படுத்தி புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். #Cheran #Thirumanam #Umapathi
பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் உள்ளிட்ட படங்களை இயக்கிவர் சேரன். சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், ராமன் தேடிய சீதை, மாயக்கண்ணாடி போன்ற சில படங்களில் சேரன் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார்.
கடைசியாக ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை இயக்கியிருந்தார். மூன்று வருடங்களுக்கு பிறகு தற்போது ‘திருமணம்’ என்ற புதிய படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இன்னொரு நாயகனாகவும், நாயகியாக காவ்யா சுரேசும் நடித்துள்ளனர்.
தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், மனோபாலா, பால சரவணன், சுகன்யா, சீமா ஜி. நாயர், அனுபமா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் பெயரை வெளியிடும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் நடிகர் விஜய் சேதுபதி படத்தின் போஸ்டரை வெளியிட்டார்.
விழாவில் சேரன் பேசியதாவது:–
‘‘திருமணம் படத்தை 4 வருடங்களுக்கு பிறகு இயக்கி இருக்கிறேன். இந்த இடைவெளியில் நிறைய அனுபவங்களை பெற்று விட்டேன். இந்த அனுபவங்கள் என்னை 10 வருடங்களுக்கு வழிநடத்தும். ஒரு நடுத்தர குடும்பத்தில் பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கி திருமணம் நடப்பது வரையிலான சம்பவங்களே படத்தின் கதை. விஜய் சேதுபதி எனது படத்தில் நடிப்பதாக கூறியிருக்கிறார். அவர் எப்போது வருகிறாரோ அப்போது அவரை வைத்து படம் இயக்குவேன்.’’
இவவாறு சேரன் கூறினார். #Cheran #Thirumanam #Umapathi
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X